செய்திகள்
அரிமளம் ஒன்றியத்தில் 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி
அரிமளம் ஒன்றியம் கடியாப்பட்டி, கானாப்பேட்டை பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அரிமளம்:
அரிமளம் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு தினந்தோறும் போடப்படுகின்றது. அரிமளம் ஒன்றியத்திலுள்ள கடியாபட்டி, அரிமளம், ரயவரம், கே.புதுப்பட்டி, ஏம்பல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நமணசமுத்திரம், கல்லூர், மேல்நிலைப்பட்டி ஆகிய மினி கிளினிக் சென்டர் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது. இந்த தடுப்பூசி நாளொன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு தொடர்ந்து போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரிமளம் ஒன்றியம் கடியாப்பட்டி, கானாப்பேட்டை பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.