செய்திகள்
கன்னியாகுமரி பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

ஊதியம் வழங்க காலதாமதம்: கன்னியாகுமரி பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

Published On 2021-04-18 14:48 IST   |   Update On 2021-04-18 14:48:00 IST
ஒப்பந்த பணியாளர்கள் பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பேரூராட்சியில் 80-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் தூய்மை பணி, திடக்கழிவு மேலாண்மை பணி மேற்கொள்ளுதல், தண்ணீர் வினியோகம் போன்ற பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தினசரி ரூ.615 வீதம் ஊதியம் வழங்க அரசாணை உள்ளது. ஆனால் ரூ.400 மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் 16-ந் தேதிதான் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 16-ந் தேதி கடந்த பின்னரும் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஒப்பந்த பணியாளர்கள் பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், சுகாதார அதிகாரி முருகன் ஆகியோர் ஒப்பந்த பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாதத்தின் முதல் வாரத்தில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Similar News