செய்திகள்
அண்ணா விளையாட்டு அரங்கில் 1,500 அரசு பணியாளர்கள் ஒன்றிணைந்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்த படம்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி 1,500 பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி - கலெக்டர் பங்கேற்பு

Published On 2021-04-02 11:09 GMT   |   Update On 2021-04-02 11:09 GMT
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடலூரில், 1,500 பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பங்கேற்றார்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். தொடர்ந்து 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் 1500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து 100 சதவீதம் வாக்களிப்போம் என்று வடிவமைக்கப்பட்ட இடத்தில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து 100 சதவீதம் தவறாது வாக்களிப்போம் என்ற உறுதி மொழியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி வாசிக்க, அனைத்து பணியாளர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு, நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில், அனைவரும் வாக்களிப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு விரல் புரட்சி என்ற பாடல் குறுந்தகட்டினை கலெக்டர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, மகளிர் திட்ட அலுவலர் செந்தில்வடிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி, கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், தாசில்தார் பலராமன், தாசில்தார் (கேபிள் டி.வி.) ஜெயக்குமார், ஓவியர்கள் மாசிலாமணி, ஞானவேல் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News