செய்திகள்
பிரதமர் மோடி

புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் காங்கிரஸ் அரசு ஊழல் புரிந்தது - பிரதமர் மோடி

Published On 2021-03-30 20:06 IST   |   Update On 2021-03-30 20:06:00 IST
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவான அலை மக்கள் மத்தியில் வீசுகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
புதுச்சேரி:

சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று மதியம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அதன்பின் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 

மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவம், தொழில்நுட்ப கல்வியை மாநில மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுப்போம். மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க மீன்வளத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் காங்கிரஸ் அரசு ஊழல் புரிந்தது. நாராயணசாமிக்கு இந்த தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு தரப்படவில்லை.
கடந்த கால ஆட்சி மோசமாக இருந்ததே காரணம். 5 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு என்ன செய்தது என்பது குறித்து மக்களுக்கு தெரிவிக்கவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவான அலை மக்கள் மத்தியில் வீசுகிறது. புதுச்சேரியில் ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது, அது என்னை மீண்டும் இங்கு வர வைத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News