செய்திகள்
குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் குன்னம்-உப்பங்காடு சாலையை படத்தில் காணலாம்.

கொள்ளிடம் அருகே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் குன்னம்-உப்பங்காடு சாலை சீ்ரமைக்கப்படுமா?

Published On 2021-03-26 20:05 IST   |   Update On 2021-03-26 20:05:00 IST
கொள்ளிடம் அருகே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் குன்னம் - உப்பங்காடு சாலை சீ்ரமைக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் இருந்து வடரங்கம் செல்லும் பிரதான சாலையில், குன்னம் கிராமத்தில் இருந்து உப்பங்காடு கிராமத்துக்கு தார் சாலை உள்ளது.

இந்த சாலை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜல்லி கற்கல் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வீ்ட்டிற்கு வரும் போது மிகுந்த அவதிக்கு உள்ளாகிறார்கள்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் குன்னம் - உப்பங்காடு சாலை சீரமைக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News