செய்திகள்
முககவசம்

தலைஞாயிறில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2021-03-20 15:28 IST   |   Update On 2021-03-20 15:28:00 IST
தலைஞாயிறு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட், டீக்கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் முககவசம் அணியாமல் பணிபுரிந்த 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வாய்மேடு:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், ஓட்டல்கள், காய்கறி கடைகள், டீக்கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் முககவசம் அணிந்து பணியாற்றுகிறார்களா? என பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். இதில் தலைஞாயிறு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட், டீக்கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் முககவசம் அணியாமல் பணிபுரிந்த 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News