செய்திகள்
சபாநாயகர் தனபால்

சட்டசபையில் அமைச்சர்கள் தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு பதில் சொல்ல வேண்டும்- சபாநாயகர் வேண்டுகோள்

Published On 2021-02-27 12:46 IST   |   Update On 2021-02-27 12:46:00 IST
சட்டசபையில் அமைச்சர்கள் பதில் சொல்லும்போது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு உட்பட்டு பதில் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. எனவே தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. என்றாலும் சட்டசபை பட்ஜெட் கூட்டம் நடத்தும் தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்ததால் இன்று சட்டசபை கூட்டம் நடந்தது.

வழக்கம் போல் காலை 10 மணிக்கு கூட்டம் கூடியதும் சபாநாயகர் தனபால், அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. எனவே சபையில் அமைச்சர்கள் பதில் சொல்லும்போது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு உட்பட்டு பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News