செய்திகள்
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குழந்தைகளுக்கு பொம்மை வாங்கி கொடுப்பதை படத்தில் காணலாம்.

புதுவை கடற்கரையில் குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுத்த தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2021-02-26 19:56 GMT   |   Update On 2021-02-26 19:56 GMT
புதுவை கடற்கரையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுத்தார்.
புதுச்சேரி:

புதுவை கடற்கரையில் தலைமை செயலகம் அருகே செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு கற்களால் ஆன இருக்கைகள் அமைக்கப்பட்டு அதன் மீது அமர்ந்து கடலை ரசிக்கவும், நடமாடும் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் அருண், சுந்தரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது புதிதாக அமைக்கப்பட்ட கற்களால் ஆன இருக்கையில் அமர்ந்து கடலை ரசித்தார். அந்த சமயத்தில் தன்னை படம் எடுத்த 2 குழந்தைகளையும் தன்னருகே அமரவைத்து அவரது சொந்த பணத்தில் இருந்த கடற்கரையில் பொம்மை விற்ற பெண்ணிடம் பொம்மை வாங்கி கொடுத்தார்.

அவர் அங்கிருந்து புறப்படும்போது அங்கன்வாடி ஊழியர்கள் சிலர் அவரை சந்தித்து தங்களது சம்பளத்தை உயர்த்தி தருமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள், உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ரே‌‌ஷன்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அங்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கன்வாடி குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதுபோல் கர்ப்பிணிகளுக்கும் சத்தான உணவு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தை போல் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிப்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும். மாணவர்களுக்கான உணவு திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றார்.
Tags:    

Similar News