செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் போட நடவடிக்கை- அதிகாரிகளுக்கு, கவர்னர் உத்தரவு

Published On 2021-02-26 04:43 GMT   |   Update On 2021-02-26 04:43 GMT
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கொரோனா தடுப்பூசி உயர்மட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் புதுவை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சுகாதாரத்துறை செயலர் அருண் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சுகாதார பணியாளர்கள் 33 சதவீதம், முன்களப்பணியாளர்கள் 6.25 சத வீதம் பேர் தான் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்தவித பாதிப்பு மற்றும் பின்விளைவு ஏற்படாது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பல மாநிலத்தில் 2-ம் சுற்று தொற்று பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை சுமார் 1.25 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அனைவரும் எந்தவித பக்க விளைவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஊடகங்கள் மூலமாக தடுப்பூசியின் பயன்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சுகாதாரத்துறை செயலர் அருண், ஜிப்மர் இயக்குனர் ராகே‌‌ஷ் அகர்வால் மற்றும் டாக்டர்கள் தடுப்பூசியின் நன்மையை எடுத்துரைத்தனர்.
Tags:    

Similar News