செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 300 பேர் கைது

Published On 2021-02-24 18:04 GMT   |   Update On 2021-02-24 18:04 GMT
வேலூரில் சாலைமறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை சத்துணவு ஊழியர்கள் அங்கு திரண்டனர். அங்கு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத் தலைவர் சரவணராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் உமாராணி கோரிக்கைகள் குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், முழுநேர அரசு ஊழியராக வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். சட்டரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். உணவு மானியம் உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், மதனலோகன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News