சினிமா செய்திகள்
பாகிஸ்தானுக்கு எதிரான கருத்து.. 'பார்டர் 2' படத்திற்கு 6 அரபு நாடுகள் தடை
பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, அஜிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் தடை.
இந்தியில் சன்னி தியோல் நடிப்பில் 'பார்டர் 2' திரைப்படம் நேற்று வெளியானது. 1997-ல் வெளியான பிளாக்பஸ்டர் படமான 'பார்டர்' படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் காட்சிகள் அதிகமாக இருப்பதாகக் கூறி பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, அஜிய அரபு அமீரகம் உள்ளிட்ட 6 மத்திய கிழக்கு அரபு நாடுகள் இப்படத்திற்கு தடை விதித்துள்ளது.
ஏற்கனவே இதே போன்ற காரணத்திற்காக கடந்த மாதம் வெளியான ரன்வீர் சிங் உடைய 'துரந்தர்' திரைப்படமும் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வளைகுடா நாடுகளில் இந்தியத் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது. படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், படத்தின் வசூல் ரீதியாகப் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.