செய்திகள்
மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை படத்தில் காணலாம்

சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட 259 சத்துணவு ஊழியர்கள் கைது

Published On 2021-02-24 14:34 GMT   |   Update On 2021-02-24 14:34 GMT
காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை பழைய நீதிமன்றம் அருகே சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை:

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை பழைய நீதிமன்றம் அருகே சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சங்க பொருளாளர் பானுமதி, மாவட்ட இணைச் செயலாளர் மலர்க்கொடி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் கண்ணுச்சாமி முன்னிலை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் சீமைச்சாமி, மாநில துணைத் தலைவர் பாண்டி, உள்பட பலர் வாழ்த்திப்பேசினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட துணைத் தலைவர்கள் பாண்டி, முத்துக்குமார், மாவட்ட இணைச் செயலாளர் ரெத்தினம், மற்றும் 247 பெண்கள் உள்பட 259 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News