செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சளிமாதிரி பரிசோதனையின் முடிவில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதியானது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதனால் தொற்றின் பாதிப்பு குறைவாக காணப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சளிமாதிரி பரிசோதனையின் முடிவில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதியானது. அவர்களில் 3 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தொற்று பாதித்த 12 பேரும் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 893 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 472 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 350 நபர்கள் உயிரிழந்து விட்டனர். தற்போது 71 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.