செய்திகள்
கே.வி.குப்பம் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது
கே.வி.குப்பம் அருகே மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கே.வி.குப்பத்தை அடுத்த கவசம்பட்டு, கருத்தம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட சின்ன ஆலங்கநேரி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 21), செல்வம் (32), சிவகுமார் (45), கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த ஹரி (40), அரியூர் ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.