செய்திகள்
துரைமுருகன்

சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக இடையேதான் பலப்பரீட்சை- துரைமுருகன்

Published On 2021-02-17 13:08 IST   |   Update On 2021-02-17 13:08:00 IST
சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் பலப்பரீட்சை போல் நடக்க உள்ளது என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர்:

காட்பாடி சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட காந்திநகர், சேண்பாக்கம் பகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் நடந்தது.

இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசியதாவது:-

நான் பல தேர்தல்களைப் பார்த்துள்ளேன். இரவு, பகல் பாராமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். ஆனால், இந்தத் தேர்தல் அப்படியல்ல. தி.மு.க. பொதுச்செயலாளராக இருப்பதால் தென் மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியுள்ளது.

எனவே, இத்தேர்தலில் கட்சியினர் ஒவ்வொருவரும் துரைமுருகனாக மாறி பணியாற்றிட வேண்டும். தேர்தல் பணியாற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பூத் சிலிப்பைக் கொண்டு வாக்காளர் பட்டியலில் விடுபட்டோர் பெயர்கள் குறித்து சரிபார்க்க வேண்டும்.

நூறு வாக்குகளுக்கு ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். வரக்கூடிய சட்டசபை தேர்தல் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் பலப்பரீட்சை போல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும்கட்சியினர் பண பலம், படை பலம் காட்டலாம். அதை தவிடுபொடியாக்கக்கூடிய வல்லமை தி.மு.க.வினருக்கு உண்டு. அந்த வகையில், இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News