செய்திகள்
வேலூர் ஜெயில்

வேலூர் ஜெயிலில் போலீசார் திடீர் சோதனை

Published On 2021-02-13 11:44 IST   |   Update On 2021-02-13 11:44:00 IST
வேலூர் டி.எஸ்.பி. மகேஷ் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை ஆண்கள் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.
வேலூர்:

வேலூர் ஜெயிலில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜெயிலில் செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கைதிகளுக்கு எளிதில் கிடைக்கிறது.

கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை உணவு பொருட்களில் மறைத்து கொடுத்து விட்டு செல்கின்றனர். ஜெயிலுக்கு வெளியே இருந்து செல்போன் கஞ்சா போன்றவை வீசப்படும் சம்பவங்களும் நடக்கிறது.

இந்த நிலையில் வேலூர் டி.எஸ்.பி. (பொறுப்பு) மகேஷ் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை ஆண்கள் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர். காலை 6 மணி முதல் ஒட்டுமொத்த அறைகளில் உள்ள கைதிகளிடமும், ஜெயில் வளாகத்திற்குள்ளும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

ஜெயில் பூங்கா பகுதிகள், சமையலறை என அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது. 2 மணி நேரம் நடந்த இந்த சோதனை காலை 8 மணிக்கு நிறைவடைந்தது.

வேலூர் ஜெயிலில் இன்று வழக்கமாக 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் சோதனை நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Similar News