செய்திகள்
கோப்பு படம்.

சென்னையில் 146 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

Published On 2021-02-11 19:57 IST   |   Update On 2021-02-11 19:57:00 IST
தமிழகத்தில் இன்று 481 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 43 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 146 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் தற்போது 4,294 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 490 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 26 ஆயிரத்து 994 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 0
செங்கல்பட்டு - 33
சென்னை - 146
கோவை - 47
கடலூர் - 16
தர்மபுரி - 3
திண்டுக்கல் - 9
ஈரோடு - 19
கள்ளக்குறிச்சி - 1
காஞ்சிபுரம் - 9
கன்னியாகுமரி - 5
கரூர் - 3
கிருஷ்ணகிரி - 1
மதுரை - 13
நாகை - 6
நாமக்கல் - 5
நீலகிரி - 6
பெரம்பலூர் - 1
புதுக்கோட்டை - 9
ராமநாதபுரம் - 1
ராணிப்பேட்டை - 8
சேலம் - 12
சிவகங்கை - 5
தென்காசி - 4
தஞ்சாவூர் - 20
தேனி - 4
திருப்பத்தூர் - 2
திருவள்ளூர் - 29
திருவண்ணாமலை - 5
திருவாரூர் - 6
தூத்துக்குடி - 2
திருநெல்வேலி - 1
திருப்பூர் - 14
திருச்சி - 15
வேலூர் - 12
விழுப்புரம் - 2
விருதுநகர் - 3
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 3
உள்நாடு - 1
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 481

Similar News