செய்திகள்
போலீசார் பறிமுதல் செய்த புகையிலை பொருட்களையும், கைது செய்யப்பட்ட தினேஷ்குமாரையும் படத்தில் காணலாம்.

விருத்தாசலத்தில் குடோனில் ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பதுக்கல் - பிளாஸ்டிக் கடை உரிமையாளர் கைது

Published On 2021-02-10 23:44 IST   |   Update On 2021-02-10 23:44:00 IST
விருத்தாசலத்தில் குடோனில் ரூ.5 லட்சம் புகையிலை பொருட்களை பதுக்கிய பிளாஸ்டிக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் தனிப் பிரிவு தலைமை காவலர்கள் பாலமுருகன், ராஜசேகர், சுரேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது விருத்தாசலம் பங்களா தெரு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், பங்களா தெருவை சேர்ந்த பீமராவ் மகன் தினேஷ்குமார் (வயது 46) என்பவரிடம் விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குபின் முரணான பதிலை அளித்தார். இைதையடுத்து, அவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கடைக்கு உரிய குடோனில் போலீசார் சோதனை செய்தனர்.

அங்கு, 21 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, புகையிலை பொருட்களை பதுக்கிய தினேஷ்குமாரை பிடித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News