செய்திகள்
மது கடத்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டது.

மது கடத்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

Published On 2021-02-10 14:40 IST   |   Update On 2021-02-10 14:40:00 IST
கடலூர் மாவட்டத்தில் மது கடத்தல், சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் மது பாட்டில்கள் கடத்தல், சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் கடலூர் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பாக போலீஸ் நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்படும். அதில் ஒருசில வாகனங்களை உரிமையாளர்கள் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்தி எடுத்து செல்வார்கள்.

அபராத தொகை செலுத்தாத வாகனங்கள் நீண்ட நாட்களாக போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

அந்த வாகனங்களை போலீஸ் துறை சார்பில் ஏலம் விடப்படும். அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை இன்று ஏலம் விடப்படும் என்று போலீசார் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று காலை மதுவிலக்கு போலீஸ் நிலைய வளாகத்தில் வாகனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு 321 பேர் வந்திருந்தனர். 20 கார்கள், 6 ஆட்டோக்கள், 116 மோட்டார் சைக்கிள்கள் என 142 வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டது.

Similar News