செய்திகள்
தங்கம், வெள்ளி பரிசு

வேலூரில் குப்பைகளை தரம்பிரித்து கொடுத்த 6 பேருக்கு தங்கம், வெள்ளி காசுகள்

Published On 2021-02-09 23:50 IST   |   Update On 2021-02-09 23:50:00 IST
வேலூரில் குப்பைகளை தரம்பிரித்து கொடுத்த 2 பேருக்கு 4 கிராம் தங்க காசு, 4 பேருக்கு 5 கிராம் வெள்ளி காசுகளை மாநகராட்சி கமிஷனர் வழங்கினர்.
வேலூர்:

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 24-வது வார்டில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். சிறந்த முறையில் தரம் பிரித்து கொடுக்கும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி காசுகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 45 நாட்கள் சிறந்த முறையில் குப்பைகளை தரம்பிரித்து மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்கிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் வழங்கும் நிகழ்ச்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. 2 பேருக்கு 4 கிராம் தங்க காசு, 4 பேருக்கு 5 கிராம் வெள்ளி காசுகளை மாநகராட்சி கமிஷனர் சங்கரன், சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஆகியோர் வழங்கினர்.

இதில், மாநகர் நலஅலுவலர் சித்ரசேனா, சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News