செய்திகள்
2-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

சிவகங்கை அருகே 2-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டம்

Published On 2021-02-04 18:16 IST   |   Update On 2021-02-04 18:16:00 IST
சிவகங்கை அருகே 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை:

8 அம்ச கோரிக்கைகளை நிைறவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்றும் 2-வது நாளாக தொடர்ந்தது.

2-ம் நாளான நேற்று நடைபெற்ற தொடர் மறியல் போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் வினோத் ராஜா முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட42 பெண்கள் உள்பட 52 பேரை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஞானதம்பி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணுச்சாமி மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த சின்னழகு, பானுமதி, மாரி, வேலுச்சாமி, முத்துக்குமார், சீமைச்சாமி, கிங்ஸ்டன், டேவிட், மூகாம்பிகை, புரட்சித்தம்பி , முத்தையா உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.

Similar News