செய்திகள்
தலைக்கவசம் அணிந்து வந்த ஒருவருக்கு நினைவு பரிசினை முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா வழங்கினார்.

சாலை பாதுகாப்பு விழா: இரு சக்கர வாகன பேரணியை நீதிபதி தொடங்கி வைத்தார்

Published On 2021-02-04 15:14 IST   |   Update On 2021-02-04 15:14:00 IST
சாலை பாதுகாப்பு விழாவையொட்டி இரு சக்கர வாகன பேரணியை நீதிபதி முத்து சாரதா தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம், வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீசார் மற்றும் வெஸ்டன் ஹாட்ஸ் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்தியது.

மாவட்ட நீதிமன்றம் அருகே போலீசார், நீதித் துறையினர், பொதுமக்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா தொடங்கி வைத்தார். இதில் ஹெல்மெட் அணிந்து வந்த சிலருக்கு பாராட்டும், நினைவுப்பரிசும் முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா வழங்கினார்.

நீதிமன்றத்தில் தொடங்கிய இந்த பேரணி நகரின் பல்வேறு வீதிகள் வழியாக வந்து கிருஷ்ணாபுரத்தில் நிறைவு பெற்றது.

பேரணியில் பங்கேற்றவர்கள் தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை விதிகள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் போக்குவரத்து வட்டார ஆய்வாளர் ஜாஸ்மின், துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News