செய்திகள்
கோப்புப்படம்

ராஜபாளையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-02-03 08:14 IST   |   Update On 2021-02-03 08:14:00 IST
ராஜபாளையத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 30). தென்காசி சாலையில் பழக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி குருசெல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன.

இந்தநிலையில் மனைவிமீது நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாரிமுத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாரிமுத்துவுக்கும், குருசெல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் மனமுடைந்த குருசெல்வி கடந்த டிசம்பர் மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனவேதனையில் மாரிமுத்து இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் திடீரென அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரது உறவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News