செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள்.

வத்திராயிருப்பு அருகே பதுக்கி வைத்திருந்த 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2021-02-01 23:52 IST   |   Update On 2021-02-01 23:52:00 IST
வத்திராயிருப்பு அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு தாலுகா மகாராஜபுரம் அம்பேத்கர் தெருவில் நேற்றுமுன்தினம் இரவு 57 மூடை ( 2½ டன் அரிசி) ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக விருதுநகர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு தொலைபேசி வாயிலாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.

இதையடுத்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2½ டன் அளவுள்ள ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வத்திராயிருப்பு போலீஸ்நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை வத்திராயிருப்பு போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News