செய்திகள்
தற்கொலை

குன்றத்தூர் அருகே பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-31 17:49 IST   |   Update On 2021-01-31 17:49:00 IST
குன்றத்தூர் அருகே பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி:

குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி ஷீலா (வயது 29). குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் தனது அறைக்கு சென்றவர் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பெற்றோர் கதவை தட்டினார்கள்.

கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ப்ரீத்தி ஷீலா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ப்ரீத்தி ஷீலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் ப்ரீத்தி ஷீலா திருமணமாகி கணவரை பிரிந்து குன்றத்தூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாகவும் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தவர் தாய் மற்றும் அண்ணனிடம் அடிக்கடி கோபித்து கொண்டு வீட்டின் அறைக்குள் சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் அதேபோல் சம்பவத்தன்று சண்டை போட்டுக்கொண்டு அறைக்குள் சென்றவர் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News