செய்திகள்
காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - 2 பேர் பலி
காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
காரைக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள வலையன்வயல் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 33). சிற்ப வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் புதுவயல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது புதுவயல் பகுதியை சேர்ந்த செல்வம் (27) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.