செய்திகள்
தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்ட காட்சி

மழையால் பாதித்த பயிருக்கு நிவாரணம் கோரி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

Published On 2021-01-23 14:34 GMT   |   Update On 2021-01-23 14:34 GMT
தேவகோட்டை அருகே மழையால் பாதித்த பயிருக்கு நிவாரணம் வழங்க கோரி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
தேவகோட்டை:

சமீபத்தில் பெய்த கடும் மழையால் தேவகோட்டை ஒன்றியம் மற்றும் கண்ணங்குடி ஒன்றியம் அதிகம் பாதிப்பு அடைந்து உள்ளது. 357 கிராமங்களில் அறுவடை தயாராக இருந்த நெற்பயிர் மழையால் சேதம் அடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேசிய பேரிடர் நிதியின் கீழ் 100 சதவீத இழப்பீடு நிவாரணம் வழங்க கோரி நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேவகோட்டை தாசில்தார் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. 

அதன் பிறகு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதற்கு அதன் தாலுகா செயலாளர் செல்வம் என்ற சுந்தரம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.கே.மாணிக்கம், தாலுகா செயலாளர் பொன்னுச்சாமி, செந்தமிழ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News