செய்திகள்
சரக்கு ரெயில்

ராயபுரத்தில் இருந்து குஜராத் படேல் நகருக்கு வாடகை சரக்கு ரெயில்

Published On 2021-01-18 14:27 IST   |   Update On 2021-01-18 14:27:00 IST
தெற்கு ரெயில்வே கோட்டம் சார்பில் வாடகை பார்சல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரெயில் சேவை ராயபுரம் - குஜராத் படேல் நகர் இடையே தொடங்கி உள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே கோட்டம் சார்பில் வாடகை பார்சல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரெயில் சேவை ராயபுரம் - குஜராத் படேல் நகர் இடையே நேற்று முதல் தொடங்கி உள்ளது. கண்ணா லாஜிஸ் டிக்ஸ் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ராயபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு சரக்கு ரெயில் புறப்படுகிறது.
இந்த ரெயில் கூடூர், விஜயவாடா, நாக்பூர், போபால், ஆக்ரா கன்டோன் மெண்ட் மற்றும் படேல்நகர் ஆகிய இடங்களில் சரக்கு ஏற்றுதல், இறக்குதலுக்காக நின்று செல்லும்.

இந்த ரெயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 2.45 மணிக்கு படேல் நகரை சென்றடையும். புதன்கிழமை மாலை 6 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ராயபுரத்துக்கு வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு வந்தடையும். ஒரே நேரத்தில் 353 டன் எடை சரக்குகள் கையாளப்படும்.

வாரத்துக்கு ஒரு சுற்று வட்ட பயணம் மூலம் முதல் ஆண்டில் ரூ. 13 கோடி வீதம் ரூ. 99 கோடி வரை வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரெயில் சேவையை சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் (பார்சல்) பி.மகேஷ் தொடங்கி வைத்தார். கூடுதல் மேலாளர் சுப்பிரமணியன், மூத்த கோட்ட வணிக மேலாளர்கள் விஜயமாலா, அரிகிருஷ் ணன், ஏழுமலை உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News