செய்திகள்
கார் தீப்பிடித்து எரிந்த காட்சி.

ராமநத்தம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Published On 2021-01-16 16:59 GMT   |   Update On 2021-01-16 16:59 GMT
ராமநத்தம் அருகே கார் டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநத்தம்:

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் லதீஷ்குமார் (வயது 29). இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன்கள் பிரேம் (30), விஷ்ணு(18), தனுஷ் (16), ராஜேந்திரன் மகன் நாகராஜ் (31), முருகன் மகள் இந்துமதி (21), முருகன் மனைவி மனுஷா (29) உறவினர் சினேகா(18) ஆகியோர் நேற்று முன்தினம் பழனிக்கு ஒரு காரில் புறப்பட்டனர். காரை பிரேம் ஓட்டினார். இவர்களது கார், கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த எழுத்தூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் டயர் வெடித்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதில் அதிர்ச்சியடைந்த லதீஷ்குமார் உள்ளிட்ட அனைவரும் அலறியடித்தபடி காரை விட்டு இறங்கினர். இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. கார் தீப்பிடித்ததை அறிந்ததும் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இந்த சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News