செய்திகள்
நாகர்கோவிலில் பெய்த மழையால் சாலையில் ஓடும் தண்ணீரை காணலாம்

நாகர்கோவிலில் நாள் முழுவதும் பெய்த மழை

Published On 2021-01-13 02:08 GMT   |   Update On 2021-01-13 02:08 GMT
நாகர்கோவிலில் நாள் முழுவதும் சாரல் மழை பெய்தது. இதனால் ஜில்லென்ற சீதோஷ்ண நிலை நிலவியது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று இரவு வரை நாள் முழுவதும் மழை பெய்தது. இந்த மழை நச, நசவென சாரல் மழையாக இருந்தது.

இதனால் நாகர்கோவில் நகரில் ஊட்டி, கொடைக்கானல் போன்று ஜில்லென்ற சீதோ‌‌ஷ்ண நிலை நிலவியது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை- 2, பெருஞ்சாணி- 4.8, சிற்றார் 1- 14.4, புத்தன் அணை- 5.4, மாம்பழத்துறையாறு- 4, முக்கடல்- 2.4, பூதப்பாண்டி- 1, நாகர்கோவில்- 3, சுருளக்கோடு- 7.2, பாலமோர்- 26.2, கோழிப்போர்விளை- 3, அடையாமடை- 2, முள்ளங்கினாவிளை- 5, ஆனைக்கிடங்கு- 3.4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இந்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 596 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 400 கன அடியும், சிற்றார்-1 அணைக்கு 18 கன அடியும், சிற்றார்-2 அணைக்கு 31 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
Tags:    

Similar News