செய்திகள்
வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு

தச்சூர், திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு

Published On 2021-01-08 04:25 GMT   |   Update On 2021-01-08 04:25 GMT
தச்சூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆய்வு செய்தார்.
ஆரணி:

ஆரணி அடுத்த தச்சூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையத்தை நேற்று காலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையர் உத்தரவின்படி கடந்த இரண்டு மாதங்களாக வாக்காளர் சேர்ப்பு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளிவர உள்ளது.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆரணி அடுத்த தச்சூரில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் ஆய்வு செய்துள்ளோம். ஏற்கனவே இந்த கல்லூரி வளாகத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளது.

தற்போது வாக்குச்சாவடி மையங்களை அதிகப்படுத்த வேண்டி உள்ளது. இதனால் தற்போது வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்கக்கூடிய இடத்தையும் அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அரவிந்த், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஜெயராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரமிளா, தாசில்தார் செந்தில்குமார், மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.அரி, ஏ.ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

திருவண்ணாமலையில் செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், வருகிற சட்டமன்றத் தேர்தலின் போது அமைய உள்ள வாக்கு எண்ணும் மையத்தையும் கலெக்டர் சந்தீப்நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News