செய்திகள்
திருவண்ணாமலையில் லாரி டிரைவர் வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை
திருவண்ணாமலையில் லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை கொள்ளையடித்துசென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்கால் செல்வாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 30), லாரி டிரைவர். இவருடன் அவருடைய தாய் மற்றும் மனைவி ஆகியோர் வசித்து வருகின்றனர். சிலம்பரசன் நேற்று முன்தினம் வேலை தொடர்பாக வெளியே சென்று விட்டார்.
அவரது தாய் மணலூர்பேட்டையில் தனது மகள் வீட்டுக்கு சென்று உள்ளார். இதனால் சிலம்பரசனின் மனைவி வீட்டை பூட்டி விட்டு அதேபகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை சிலம்பரசன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்துள்ளது.
இதை பார்த்த பக்கத்து வீட்டினர் சிலம்பரசனுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனே சிலம்பரசனும், அவரது மனைவியும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சிதறி கிடந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துசென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிலம்பரசன் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்தகொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.