செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கி திடீரென வெடித்ததால் பரபரப்பு

Published On 2021-01-06 14:59 IST   |   Update On 2021-01-06 14:59:00 IST
வேலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மேஜையில் வைத்தபோது துப்பாக்கி வெடிக்க காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே வடக்கு போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் விருதம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகிய இருவரும் போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.

நள்ளிரவில் அவர்கள் இருவரும் வடக்கு போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தனர். ஜெகதீசன் கைத்துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில் உள்ள மேஜையில் வைத்துள்ளார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி வெடித்தது.

அதிர்ஷ்டவசமாக அதில் இருந்து பாய்ந்த குண்டு யார் மீதும் படாமல் போலீஸ் நிலைய மேற்கூரையை துளைத்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் மேற்கூரை கடுமையாக சேதம் அடைந்தது.

துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு போலீஸ் நிலையத்தில் இருந்த மற்ற போலீசார் பதட்டம் அடைந்தனர். இதனால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பதால் நிம்மதி அடைந்தனர்.

இந்த சம்பவம் வேலூர் மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் மேஜையில் வைத்தபோது துப்பாக்கி வெடிக்க காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News