செய்திகள்
புத்தாண்டு தினத்தில் சோகம்: தாய் திட்டியதால் வாலிபர் தற்கொலை
வேலூரில் புத்தாண்டு தினம் அன்று தாய் திட்டியதால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முபாரக் (வயது 26) . கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை தாயார் கண்டித்துள்ளார்.
மனமுடைந்த முபாரக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் புத்தாண்டு அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முபாரக்கின் பிணத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.