செய்திகள்
அபராதம்

வேலூரில் 2 லாரிகளுக்கு அபராதம்

Published On 2021-01-03 10:17 IST   |   Update On 2021-01-03 10:17:00 IST
வேலூரில் 2 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 4 கார்களின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பம்பர் கம்பிகள் அகற்றப்பட்டன.
வேலூர்:

வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் ஆகியோர் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் மேற்புறம் தார்பாயால் மூடாமல் சென்றது தெரியவந்தது. அதை தொடர்ந்து அந்த லாரிகளுக்கு தலா ரூ.2, 000 வீதம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 4 கார்களின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பம்பர் கம்பிகள் அகற்றப்பட்டன.

Similar News