செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் நேற்று வெளியான முடிவில் 12 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் தினமும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வெளியான முடிவில் 12 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 255-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.