செய்திகள்
வேலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 13 பேர் டிஸ்சார்ஜ்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
அடுக்கம்பாறை:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 350 படுக்கையுடன் கூடிய இந்த வார்டில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.