செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று
வேலூர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தினமும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி நேற்று வெளியான முடிவில் 13 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.