செய்திகள்
கோப்புப்படம்

டாஸ்மாக் அருகே அனுமதியின்றி இயங்கிய தள்ளுவண்டி, பெட்டிக்கடைகள் அகற்றம்

Published On 2020-12-30 23:46 IST   |   Update On 2020-12-30 23:46:00 IST
டாஸ்மாக் அருகே பெரும்பாலான கடைகள் அனுமதியின்றி இயங்குவது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அந்த கடைகளை அகற்றப்பட்டன.
வேலூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் டாஸ்மாக் பார்கள் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பார்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. டாஸ்மாக் அருகே அனுமதியின்றி தள்ளுவண்டி, பெட்டிக்கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் வேலூர் கோட்ட டாஸ்மாக் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் பொது மேலாளர் கீதாராணி நேற்று மாலை பென்னாத்தூர், அடுக்கம்பாறை, வேலூர் பழைய, புதிய பஸ்நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்தார். அப்போது அந்தக் கடைகளின் அருகே காணப்பட்ட தள்ளுவண்டி, பெட்டிக்கடைகளுக்கு அனுமதி உள்ளதா என்று சோதனையிட்டார். அதில், பெரும்பாலான கடைகள் அனுமதியின்றி இயங்குவது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அந்த கடைகளை அகற்றப்பட்டன. அனுமதியின்றி தொடர்ந்து கடைகள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மேலாளர் எச்சரிக்கை விடுத்தார்.

வேலூர் கோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் அருகே அனுமதியின்றி 33 தள்ளுவண்டி, பெட்டி கடைகள் இயங்கி வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த கடைகள் விரைவில் அகற்றப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News