செய்திகள்
கீழ்வேளூர் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
கீழ்வேளூா் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிாிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே வெண்மணி மேல காவலக்குடியை சேர்ந்த ஜெயராமன் மகன் மாதவன் (வயது25). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு. திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மாதவனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த மாதவன், அந்த பகுதியில் உள்ள பெரிய குளத்தில் இறங்கி உள்ளார். அப்போது அவா் குளத்தில் மூழ்கி மாயமாகினார்.
இதுகுறித்து அந்த பகுதியினா் தெரிவித்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு வந்து தேடினா். ஆனால் அவா் கிடைக்கவில்லை. நேற்று காலையில் மாதவன் பிணமாக குளத்தில் மிதந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூா் போலீசாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பாிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.