செய்திகள்
கோப்புப்படம்

பட்டாசு கடை அமைக்க விரும்புபவர்கள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

Published On 2020-12-24 09:34 GMT   |   Update On 2020-12-24 09:34 GMT
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி பட்டாசு கடை அமைக்க விரும்புபவர்கள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பி்க்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் 2021-ம் ஆண்டு புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில், தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனைக்கடைகள் அமைக்க விரும்புபவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் புல வரைபடம், பத்திர ஆவணங்கள் மற்றும் 10 (1) அடங்கல் நகல், ரூ.500-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட அசல் சலான், முகவரி (பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஸ்மார்ட் அட்டை), நகராட்சி அல்லது பேரூராட்சி அல்லது ஊராட்சி வரி ரசீது, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவைகளை இணைத்து அனுப்ப வேண்டும்.

அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனைக்குப் பின்னர் ஆணைகள் பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News