செய்திகள்
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு- திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்குடியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி:
காரைக்குடி ஐந்து விளக்கு அருகே தி.மு.க. மகளிர் அணி சார்பில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு காரணமான மத்திய அரசு, மாநில அரசு ஆகியவற்றைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே. ஆர். பெரியகருப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் காரைக்குடி நகர மன்ற முன்னாள் தலைவர் முத்துத்துரை, நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, கோட்டையூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.ஆர்.ஆனந்த், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப.சின்னத்துரை, தொழிலாளர் முன்னேற்ற சங்க கவுரவத் தலைவர் வைரவன், மாவட்ட துணைச்செயலாளர் ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதி கண்ணாத்தாள், தெய்வானை, இளமாறன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.