செய்திகள்
இறுதி சடங்கு நடத்துவதற்காக விவசாயிகள் பால்குடத்துடன், மணியடித்தபடி ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

வந்தவாசியில் விவசாயிகள் நூதன போராட்டம்

Published On 2020-12-22 08:15 IST   |   Update On 2020-12-22 08:15:00 IST
வந்தவாசியில் புயலால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட வராத அதிகாரிகளை கண்டித்து இறுதிசடங்கு செய்யும் நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
வந்தவாசி:

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட வராத, வேளாண் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வந்தவாசியில் என்.எம்.ஆர். உழவர் பேரவை சார்பில் இறுதி சடங்கு நடத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக வந்தவாசி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் 18-ம் நாள் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக தர்ப்பை புல் உள்ளிட்டவற்றை தூளி கட்டியும், தோளில் பால்குடத்தை சுமந்தபடியும், சங்கு ஊதிக்கொண்டும், மணி அடித்தவாறு, தாலுகா அலுவலகம் வரை வந்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்கள் கொண்டு வந்த பால் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் விவசாயிகள் மனுக்கள் கொடுக்க தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். இந்த போராட்டத்தில் உழவர் பேரவையை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்

Similar News