செய்திகள்
கோப்பு படம்

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை- பழ வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை

Published On 2020-12-16 17:45 IST   |   Update On 2020-12-16 17:45:00 IST
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

சிவகாசி அருகே சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மாரிக்காளை (வயது48). பழ வியாபாரி. இவர் 2017-ம் ஆண்டில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை நீதிபதி பரிமளா விசாரித்து, மாரிக்காளைக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்தார்.

Similar News