செய்திகள்
விபத்து பலி

புதுவை அருகே போலீஸ் பஸ் மோதி வேன் டிரைவர் பலி

Published On 2020-12-16 12:08 IST   |   Update On 2020-12-16 12:08:00 IST
புதுவை அருகே போலீஸ் பஸ் மோதி வேன் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கஞ்சனூரில் நடந்து வருகிறது.

நாள்தோறும் 100 போலீசார் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இன்று காலை ஐ.ஆர்.பி.என்-க்கு சொந்தமான போலீஸ் பஸ்சில் சுமார் 50 போலீசார் செஞ்சி சென்றனர்.

விழுப்புரம் சாலையில் அரியூர் அருகே சென்றபோது திடீரென போலீஸ் பஸ்சின் முன்பக்க டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் பஸ் வலதுபுறமாக இழுத்து சென்றது. அப்போது எதிரே வில்லியனூர் நோக்கி வந்த சரக்கு வாகனத்தின் மீது பஸ் மோதியது.

இதில், சரக்கு வாகனத்தின் முன்பக்கம் முழுவதுமாக நசுங்கியது. டிரைவர் இடிபாடுகளில் சிக்கினார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளை அகற்றி டிரைவரை மீட்டனர். ஒரு சில நிமிடங்களில் அவர் இறந்தார். விபத்தில் பலியான டிரைவர் கண்டமங்கலம் சின்னபாபுசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார்(25) என்பது தெரிய வந்தது.

இவர், வில்லியனூரில் தனியார் கியாஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை கியாஸ் குடோனில் சிலிண்டர் எடுப்பதற்காக வந்தபோது விபத்தில் சிக்கி பலியாகி விட்டார்.

பஸ் மோதிய விபத்தில் பஸ்சில் பயணித்த 2 போலீசார் படுகாயமடைந்தனர். இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Similar News