செய்திகள்
போளூரில் லட்டரி சீட்டு, புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
போளூரில் லட்டரி சீட்டு, புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலராமன், செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போளூர் பஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்ற போளூர் அல்லிநகரை சேர்ந்த செல்வம் (வயது 47) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அல்லிநகரில், புகையிலை பொருட்களை விற்பனை செய்த சர்தார்அலி (35) என்பவரையும் கைது செய்தனர்.