செய்திகள்
கோப்பு படம்.

குடும்ப தகராறில் நெசவுத்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

Published On 2020-12-12 13:30 IST   |   Update On 2020-12-12 13:30:00 IST
களம்பூர் அருகே குடும்ப தகராறில் நெசவுத்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

களம்பூரை அடுத்த இலுப்பகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (வயது 35), நெசவுத்தொழிலாளி. இவரின் மனைவி சரஸ்வதி. கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. மதன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அவர், 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். 9-ந்தேதி மதன் வீட்டுக்கு வந்தபோது, கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த மதன் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலி தாங்க முடியாமல் அலறி கொண்டு எரியும் தீயுடன் வீதிக்கு ஓடி வந்தார். அவரை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மதன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து மனைவி சரஸ்வதி களம்பூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வினாயகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட மதனுக்கு சசிகலா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.

Similar News