செய்திகள்
வழக்கு பதிவு

மறியல் போராட்டம் நடத்திய காங். தலைவர் மீது வழக்கு

Published On 2020-12-11 17:44 IST   |   Update On 2020-12-11 17:44:00 IST
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி புதுவையில் மறியல் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள், தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 8-ந்தேதி பந்த் போராட்டம் நடந்தது.

புதிய பஸ் நிலையம், காமராஜர் சிலை சதுக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மறியல் நடந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி தன்ராஜ் அளித்த புகாரின் பேரில் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் தேவபொழிலன், இந்திய கம்யூனிஸ்டு சலீம், ஆம்ஆத்மி ரவிசீனுவாசன், மக்கள் நீதி மய்யம் பிராங்களின் பிரான்சுவா, சுசிகம்யூனிஸ்ட் லெனின்துரை, அரசு ஊழியர் சம்மேளனம் பாலமோகனன் உள்ளிட்டோர் மீது நோய் தொற்று பரவல் தடுப்பு சட்டம், ஊரடங்கு உத்தரவை மீறல், கும்பலாக கூடுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காமராஜர் சிலை சதுக்கத்தில் மறியல் செய்த தொழிற்சங்க நிர்வாகிகள் சீனுவாசன், பிரபுராஜ், அந்தோணி, ரமேஷ் உள்ளிட்டோர் மீது 2 பிரிவுகளின் கீழ் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News