செய்திகள்
மனைவி பிரிந்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தற்கொலை
வில்லியனூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 29). தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரது மனைவி கீதாவுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கீதா தனது தாயாரின் வீட்டுக் கு சென்று விட்டார். இதனால் சுகுமார் மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.