செய்திகள்
கோப்புபடம்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-12-08 14:55 IST   |   Update On 2020-12-08 14:55:00 IST
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருமருகலில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி:

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தியும் திருமருகல் தபால் நிலையம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி, ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வேளாண் திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பபட்டன.

அதேபோல் திருமருகல் பஸ்நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் வி.சுப்பிரமணியன், நாகை மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின்பாபு, ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர் என்.எம்.பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Similar News